சர்வதேச கடற்பரப்பில் 200 ஏதிலிகளுடன் மற்றொரு படகு தத்தளித்து வருகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படகில் உள்ளவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கிடைக்கவில்லை.
இந்தப் படகில் இருப்பவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை இத்தாலியின் புதிய பிரதமர் நிராகரித்துள்ளார் என்று சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படகில் இருப்போர் பிரான்ஸை இலக்கு வைத்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில் பிரேஞ்சு தொண்டு நிறுவனம் ஒன்று, ஏதிலிகளுக்கு உதவ வேண்டும் என்று பிரான்ஸ் கடற்படை அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளது.
இந்தப் படகு பிரெஞ்சுத் தீவான கொர்ஸிகா பகுதியிலுள்ள கடல் பரப்பை வியாழனன்று சென்றடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ் தரப்பில் என்ன பதில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அதேவேளை, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் தத்தளித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்த 303 பேர் தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post