அமெரிக்காவில் உள்ள வாகவில் என்ற நகரத்தில் வசிக்கும் நபரொருவர் 18 ஆண்டுகளாக தனது அண்டை வீட்டாரின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தி வந்த சம்பவம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கென் வில்சன் என்பவர் தனது மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்தார். அதனால் அவர் தனது மின் நுகர்வை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.
அந்த முயற்சிகளால் மாற்றம் ஏற்படுத்தாததால், அவர் மேலும் விசாரிக்க முடிவு செய்தார். கென் வில்சன் தனது மின்சார பயன்பாட்டைக் கண்காணிக்க ஒரு சாதனத்தை வாங்கினார்.
மேலும், அதன் பிரேக்கர் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் அவரது மீட்டர் தொடர்ந்து இயங்குவதை கண்டுபிடித்தார்.
வில்சன் பின்னர் இந்த பிரச்சனை பற்றி பசிபிக் கேஸ் & எலெக்ட்ரிக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.
அவர்களது விசாரணையில், வாடிக்கையாளரின் குடியிருப்பு மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அடிக்குமாடி குடியிருப்புக்கான மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது
Discussion about this post