அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் 178 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மட்டும் எதிராக வாக்களித்தார்.
மேலதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து 22ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கியிருந்தன.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது.
Discussion about this post