13 வயதுச் சிறுமி ஒருவர் பாட்டன், மாமா மற்றும் மூத்த சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் மெனராகலை, எத்திமலே பிரதேசத்தில் நடந்துள்ளது.
சிறுமி தனது பாட்டன் மற்றும் சிறுமியின் மூத்த சகோதரன் ஆகியோரால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் சகோதரனை முதலில் கைது செய்ய மொனராகலைப் பொலிஸார், தற்போது பாட்டன் மற்றும் மாமன் ஆகியோரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி சட்ட வைத்திய மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post