ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது இரசாயனத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று பிரிட்டன் அச்சம் வெளியிட்டுள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் அதிகாரிகள், உக்ரைனின் தேசியவாதிகள் இரசாயனத் ஆயுதங்களைத் தயாரிக்கின்றனர் என்று ரஷ்யா திடீரெனக் கூறியுள்ளமை கவனிக்கத்தது என்றும் குறிப்பிட்டுள்ளன.
பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, ரஷ்யா இரசாயனத் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என்று அந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை, உக்ரைனின் மரியபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பிரதான நகரங்களின் மீது ரஷ்ய இராணுவம் 14 நாள்கள் கடந்தும் தாக்குதல் நடந்தி வருகின்றது.
கடந்த சில நாள்களாக மனிதாபிமான தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளபோதும், மரியபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
Discussion about this post