பாடசாலை சத்துணவுத் திட்டத்துக்காக, இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, பாடசாலை மதிய உணவு திட்டத்துக்காக 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படும் என்று சீனா கூறியிருந்தது.
கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு சீனா வழங்கியிருந்த நிலையில் தற்போது ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.
Discussion about this post