இந்தியாவிலிருந்து ஒட்சிசனை ஏற்றிய இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு
சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை நோக்கி தமது பயணத்தை இன்று
ஆரம்பித்துள்ளன. சுகாதார அமைச்சினால் கோரப்பட்டுள்ள 100 தொன் ஒட்சிசனுடன்
இக்கப்பல்கள் இலங்கை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக
கடற்படையினர் தெரிவித்தனர்.
கடந்த 17 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இலங்கை
கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பலும், இந்திய கடற்படையின் சக்தி கப்பலும்
இவ்வாறு ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படையினர்
தெரிவித்தனர்.
இலங்கையின் கடற்படைக்கு சொந்தமான கப்பலானது இன்று அதிகாலை சென்னை
துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.
Discussion about this post