மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை உயரலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் தற்போது 5 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அடுத்த வாரம் மின்வெட்டு ஆறரை மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post