லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த கோசல விதானாராச்சி, தற்போதைய நிலைமையக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய நிலையில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மாத்திரமே நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கிறது.
அதனால் அதை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு எமக்கு உள்ளது. அதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.- என்றார்.
Discussion about this post