நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு
தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி
சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை
தடுப்பூசி செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி
மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர்
தெரிவித்தார்.
எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதற்கு மேலதிகமாக விஹாரமாதேவி பூங்கா,
தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ
வைத்தியசாலையிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
Discussion about this post