இன்று மூன்று பிள்ளைகளின் தந்தை அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழப்பு
உடுப்பிட்டியை வதிவிடமாக கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (02.09.2021) பிற்பகல் ஒரு மணியளவில்அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்றது.
அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வசித்து வந்தவருமான தியாகராஜா மதனபாலன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளானர் .
வயலில் உழுதுகொண்டு இருந்தபோது இச் சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post