இன்றைய நாள்
நாள்-புதன் கிழமை
திதி-நவமி காலை 8.03 வரை பிறகு தசமி
நட்சத்திரம்
மிருகசீரிடம் பகல் 1.09 வரை பிறகு திருவாதிரை
யோகம்-சித்தயோகம்
ராகுகாலம்-பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்-காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம்-காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்-விசாகம் பகல் 1.09 வரை பிறகு அனுஷம்
சூலம்-வடக்கு
பரிகாரம்-பால்
இன்றைய இராசி பலன்கள்
மேஷ ராசி
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் சேரும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது
நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
Discussion about this post