ஹெரோய்ன் போதைப் பொருள் விற்பனையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புளுமென்டால் பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரிடம் போதைப் பொருளைப் பெற்று விற்பனை செய்து வந்த இளம் பெண் ஒருவரே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விநியோகத்தரான பெண் தன்னிடம் பெற்றுக்கொண்ட போதைப் பொருளுக்கான பணத்தைச் செலுத்தவில்லை என்பதால், இளம் பெண்ணைக் கடத்தி தனது உதவியாளர்களைக் கொண்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், பாலியல் ரீதியாக அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியுள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புளுமென்டால் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post