ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். விபத்துத் தொடர்பான விசாரணைகள் அந்த நாட்டு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post