அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளதாகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது வரை 99 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை எனவும் அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மீட்புப்பணி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த அனரத்தத்தால் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்தததாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட சூழல், காற்றில் குறைவான ஈரப்பதம், வேகமான காற்று ஆகிய மூன்று காரணிகளே காட்டுத் தீ வேகமாகப் பரவ முக்கிய காரணம் என இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post