இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை நேற்று எட்டப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படாததால் இன்றும் காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் அரசு, அது எப்போது அமலுக்கு வரும் என்பது 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தற்காலிகமானது எனவும், காஸாவிலிருந்து ஹமாஸை முழுமையாக அழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு தெளிவு படுத்தியுள்ளார்.
Discussion about this post