இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ம் திகதி முதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஆசிரிய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.
அடுத்த வாரத்தை எதிர்ப்பு வாரமாகவும் ஆசிரிய தொழிற்சங்கங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன.
ஜோசப் ஸ்டாலின் 12ஆம் திகதிக்குள் விடுதலை செய்யப்படாவிட்டால் அடுத்தகட்டமாக கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Discussion about this post