வௌிநாட்டு தபால் சேவை கட்டணத்தை அதிகரிக்க இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டணம் அதிகரிக்கப்படுமென தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா, நெதர்லாந்து இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டிற்கான விமானங்களின் சேவைகள் வரையறுத்தும் இடைநிறுத்தப்பட்டும் உள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post