சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் தரமறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட காணொளி ஒன்றில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தன்னுடைய மேலதிக கொடுப்பனவானது இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும் அதற்கான தரவுகளை யாழ் மாவட்ட வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள்
அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் பிரதேசங்களில் ஒரு போதும் சேவையை தொடரமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை மூன்று மாதகாலம் தனது பாவனைக்காக வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ வேறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அர்ச்சுனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post