இலங்கையில் வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது ஒரு வருடத்தால் நீடிக்கப்படவுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த வருடத்தில் 63 வருடங்களைப் பூர்த்தி செய்த வைத்தியர்கள் 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டும்.
ஆண்டு இறுதிக்குள் 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள், அடுத்த ஆண்டு பிறந்த திகதியைத் தொடர்ந்து ஓய்வு பெற வேண்டும்.
இந்த வருடத்தில் 59 வயதான வைத்தியர்கள் 2023 ஆம் ஆண்டு 60 வயதைப் பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
அதேவேளை, பொதுத்துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக அண்மையில் திருத்தப்பட்டது.
Discussion about this post