அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது காணப்படும் கட்டில்களின் அளவில் 50
வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்குவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட
உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டதாக சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது.
வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பணியாளர்கள் இயலுமானவரை
தனிப்பட்ட ரீதியில் கொரோனா நோயாளர்களை கண்டறிந்து, தகவல்களை உறுதி
செய்து, சிகிச்சை வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post