அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னலின் பத்திரிகையாளர் ஒருவரை வேவுநடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ரஷ்யா கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரகசிய தகவல்களை பெறமுயன்றவேளை இவான் கெர்ஸ்கோவிச் என்ற பத்திரிகையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ரஷ்யாவின் எவ்எஸ்பி பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான பத்திரிகையாளர் ரஸ்ய இராணுவதொழில்துறை வளாகத்தின் நிறுவனங்கள் ஒன்றின் நடவடிக்கைகள் பற்றிய இரகசிய தகவல்களை சேகரித்து வருகின்றார் என ரஸ்ய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும் செய்தியாளர் எப்போது கைதுசெய்யப்பட்டார் என்பது குறித்த விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த குற்றச்சாட்டு உறுதியானால் செய்தியாளருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
அதேசமயம் அமெரிக்காவின் உத்தரவின் பேரிலேயே செய்தியாளர் அவ்வாறு செயற்பட்டார் என எவ்எஸ்பி தெரிவித்துள்ளது.
இதேவேளை பனிப்போரின் பின்னர் ரஷ்யாவில் அமெரிக்க செய்தியாளர் ஒருவர் வேவு குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்படுவது இதுவே முதல்தடவை ஆகும்.
Discussion about this post