இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு யோசனை முன்வைத்துள்ளபோதும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதை நிராகரித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தினேஷ் வீரக்கொடியை நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைத்ததுடன், அவ்வாறில்லாவிட்டால் என்றால், பொருளாதாரம் சம்பந்தமான முக்கியமான முடிவுகளை தன்னால் எடுக்க முடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயினும் பிரதமர் முன்வைத்த இந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எந்த காரணம் கொண்டும் நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் இந்த முடிவால் இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post