வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) சிங்கப்பூருக்கு (Singapore) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் (Vivian Balakrishnan) அழைப்பின் பேரில், நாளை (07) அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார்.
இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தல்
இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் அமைச்சருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
இதேவேளை, சிங்கப்பூரில் 09ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆண்டிற்கான ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய-பசிபிக் உச்சி மாநாட்டில் அலி சப்ரி பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post