5 நாட்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி, ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இன்று (26ஆம் திகதி) வரையானயில் இந்த 12 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய 05 பெண்கள் உட்பட 12 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைஇதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நியூசிலாந்தில் வேலை வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடாத்திய குருநாகலில் உள்ள சட்டவிரோத முகவர் நிறுவனம் ஒன்றும் சோதனையிடப்பட்டதுடன், சுயவிபரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அடங்கிய 108 கோப்புகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post