இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை சாலையோர காலணி வியாபாரி ஒருவர் மோசடி செய்த சம்பவம் ஒன்று முகநூலில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான நிலையில் சமீப நாட்களாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டு மக்களால் ஏமாற்றப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று முகநூலில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் சாலையோரத்தில் காலணிகளை சுத்தம் செய்து தரும் தொழிலை மேற்கொண்டு வரும் நபரொருவர் பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஹாரி என்ற இளைஞரின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்துள்ளார்.
அதற்கான கூலியை குறித்த வெளிநாட்டவர் அவரிடம் கேட்ட போது, குறித்த நபர் 3000 ரூபா என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டவர் சிறுது நேரம் அந்த காலணி கடையின் உரிமையாளரிடம் பேசி 1000 ரூபாவை கொடுத்து விட்டு வந்துள்ளார்.
குறித்த நபரின் மோசடி செயலை முகநூலில் பார்த்த இலங்கையர்கள் பலர் வெளிநாட்டவரிடம் மன்னிப்பு கோரியதுடன் குறித்த வியாபாரியின் செயலுக்காக வருத்துவதாக தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Discussion about this post