அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டவரைபு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வரைபின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. 178 மேலதிக வாக்குகளால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களித்தார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட பொதுஜன பெரமுனவின் முன்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 45 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று அறிய முடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள்.
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒருசிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதாக பகிரங்கமாக அறிவித்த பொது ஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
Discussion about this post