இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களை பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதன் காரணமாக தமது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களுக்கான கேள்வி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினம் மொத்தமாக 2,500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், இது நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டு எண்ணிக்கையிலும் 100 வீத அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post