அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை அனுப்பும் பொறுப்பை மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறையிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசு மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
தம்மை நாட்டுக்கு அனுப்புவதற்கு உரிய வேலைத்திட்டத்தை மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறை தயாரிக்கவில்லை என சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தற்போது முறைப்பாடு செய்கின்றனர்.
அதேவேளை, அரசாங்கத்தின் அரச ஊழியர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 5 ஆயிரம் அரச ஊழியர்களை வெளிநாட்டு தொழிலுக்காக அனுப்ப மனிதவளம் மற்றும் வேலைவாய்ப்பு துறை எதிர்பார்த்துள்ளது என்று கூறப்படுகிறது.
Discussion about this post