லெபனானின் தலைநகரான பெய்ரூட்டுக்கான (Beirut) விமான சேவைகளை சுவிட்சர்லாந்து (Switzerland) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள காற்பந்து மைதானத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடத்த்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
விமான சேவைகள் ரத்து
இதற்கு பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவமும் லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
அந்த வகையில், குறித்த சம்பவத்தின் பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாகவே, லுப்தான்சா மற்றும் அதன் உப நிறுவனங்களான SWISS மற்றும் Eurowings ஆகிய அனைத்து விமான நிறுவனங்களும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவையை ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post