நீண்ட விடுப்பு பெற்று தொழில் அல்லது பிற நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் பொதுத்துறை ஊழியர்கள், விடுமுறையை முடித்துவிட்டு சேவைக்கு திரும்பாத பட்சத்தில் அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், அவருடைய பணி இடம் வெற்றிடமாகியுள்ளதாக கருதப்படும் என பொது நிர்வாக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
2022இல் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட விசேட ஏற்பாடுகளின் கீழ் விடுமுறையைப் பெற்ற சில அதிகாரிகள் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்கள்அதன்படி, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பாத அதிகாரிகள் பணியிடங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2,000க்கும் மேற்பட்ட பொதுத்துறை பணியாளர்கள், வெளிநாட்டு தொழில்களுக்காக அல்லது பிற நோக்கங்களுக்காக விடுமுறைகளை பெற்றுள்ளனர்.எனினும் பெருமளவானோர், அந்த விடுமுறை நிபந்தனைகளை மீறும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post