இஸ்ரேல் (Israel) மற்றும் தென் கொரியாவில் (South Korea) சுமார் 30,000 புதிய வேலைவாய்ப்புகள் இந்த வருடத்தில் உருவாக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau Of Foreign Employment) சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இதன்படி இந்த வருடம் இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் பெரும் வளர்ச்சியைக் காட்டுவதாக பணியகம் கூறியுள்ளது.
இந்நிலையில், உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau Of Foreign Employment) தெரிவித்துள்ளது.
இது தவிர, சைப்ரஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்த இரண்டு மாதங்களில் பல புதிய வேலை உயர்வு திட்டங்கள் தொடங்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post