வெண்டைக்காய் எந்தளவுக்கு உடல் நலத்திற்கு நன்மை செய்கிறதோ அதே அளவிற்கு அதன் சாறு பல நன்மைகளை கொடுக்கிறது.
வெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி அதன் தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்ட வேண்டும்.
பின்னர் அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.
வெண்டைக்காய் ஊறவைத்த நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காய் சாறு வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
வெண்டைக்காய் சாறு தொண்டை புண்ணிற்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தொண்டைப்புண் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் தொடர்ந்து குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வெண்டைக்காய் சாற்றில் சரியான அளவில் போலட் – போலிக் அமிலம் காணப்படுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
Discussion about this post