உக்ரைனில் உள்ள ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா நேற்று (4) அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் தீட்டி, கிரெம்லின் மாளிகை மீது இரண்டு ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அதிபர் மாளிகை வெடித்துச் சிதறியுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீதும், கர்சன் நகர் மீதும் ரஷ்யா இன்று(4) அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
ரஷ்யா ஏவிய ஏவுகணைகள் ரயில்நிலையம் மற்றும் சூப்பர் மார்க்கெட்டை தாக்கின. இந்தத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post