அரசாங்கம் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளால் பணவீக்கம் 69 வீதத்திலிருந்து 1.7 வீதமாகக் குறைந்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் பொருளாதார வேகம், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால், தற்போது நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கும் முடியாமல் போயிருக்கும்.அத்துடன் நாடாளுமன்ற கட்டிடமும் அழிவடைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post