இலங்கையை பொருத்தவரை வீதி விதிமுறைகள் மிகவும் கடினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதை மீறும் பட்சத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பறிக்கப்படும், தண்டமாக பணம் செலுத்துதல் மேலும், வழக்கு பதிவு செய்யப்படும்.
ஆனால், இது சாதாரண பொது மக்களுக்கு மட்டும் தானா? என்ற கேள்வி எமது ஒருவன் செய்திபிரிவிற்கு கிடைத்த காணொளியை பார்த்தால் கேட்க தோன்றுகின்றது.
குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரி ஒருவர், வாகன நெரிசல் வேலையில் தனது மோட்டார் சைக்கிளில் முறையற்ற விதத்தில் பாதையை கடந்து செல்லும் விதம் பதிவாகியுள்ளது. மேலும், அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே பாதையையும் கடக்கின்றார்.
நாட்டு மக்களை பொறுப்புடன் வழிநடத்தும் பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு நடந்து கொள்ளும் பட்சத்தில் எப்படி சட்ட ஒழுங்குகளையும் வீதி விதிமுறைகளையும் மக்கள் கடைபிடிப்பர்.
இலங்கை காவல் துறையினர் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post