நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர் அருகில் சென்றமையால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே இறங்கி சென்றார் என்று கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமே இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
Discussion about this post