வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் தொழில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வீட்டுப்
பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவோரின் வயதெல்லையை 18 ஆக
அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால
டி சில்வா தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 12,500 ரூபாவாக
அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் வரவு – செலவுத்
திட்டத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 3500
ரூபா கொடுப்பனவு அடங்கலாக அவர்களின் மாத சம்பளம் 16,000 ரூபா வரை
உயர்வடையுமென்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஆகக் குறைந்த சம்பள
சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
கூறினார்.
Discussion about this post