சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், ஆசிரியர், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். சாணக்கிய நிதி என்பது ஒருவரின் வாழ்க்கையில் சோதனையாக நிற்கும் வாழ்க்கைப் பாடங்களின் தொகுப்பாகும்.
நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் அறிகுறிகளை அறிந்துகொள்வதன் முக்கியத்துவமே இதன் முக்கிய கருப்பொருள் ஆகும்.
அதாவது நிதி நெருக்கடிகள் வரும்போது அதன் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது பல நெருக்கடிகளைத் தவிர்க்க உதவும்.
இந்த பதிவில் நிதி நெருக்கடியை முன்கூட்டியே அறிவிக்கும் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பணக்கஷ்டத்தின் அறிகுறி
இந்து மதத்தின் படி, துளசி செடி பல வீடுகளில் தெய்வமாக வணங்கப்படும் ஒரு புனிதமான தாவரமாகும். போதுமான பராமரிப்பிற்குப் பின்பும் குறித்த செடி காய்ந்துவிட்டால் வறுமை ஆரம்பமாகும் என்று அர்த்தம்.
காரணம் இல்லாமல் வீட்டில் வாக்குவாதம் சண்டைகள் ஏற்பட்டால் நிதி நெருக்கடி ஏற்படுவதுடன், கிரக தோஷம் அல்லது வாஸ்து தோஷம் பிரச்சினைகளும் இதற்கு காரணமாகவும் இருக்கலாம்.
வீட்டில் கண்ணாடி அடிக்கடி உடைந்து போனால் நிதி இழப்பின் அறிகுறியாக இருக்கலாம். தற்போது இருப்பதை விட கூறுதல் வறுமை ஏற்படுமாம்.
வழிபாடு இல்லாத இடத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் காணப்படாது. வழியாடு இல்லாமலும், வழிபட முடியாத சூழல் ஏற்பட்டால் அது பொருளாதார சிக்கலை கொடுக்கின்றது.
பெரியவர்களை மதிப்பது இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை அம்சமாகும். பெரியவர்களை அவமரியாதை செய்வது வரவிருக்கும் பொருளாதார நெருக்கடியின் அடையாளம் என்று சாணக்கியர் நம்பினார்.
Discussion about this post