அரசு இலவசமாக வழங்கிய பசளையை எறிந்த்து விவசாயிகள் தண்டனைக்குரிய
குற்றத்தை செய்வதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா
கூறினார்.
நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மஹரகம வித்தியாலய சந்தியில்
நடைபாதை மற்றும் வடிகாண் அபிவிருத்தி திட்டத்தை தொடங்க்கிவைக்கும்
நிகழ்வில் பங்குபெற்றிய இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
இதன்போது, ”திரவ பசளை துர்நாற்றம் வீசுவதாக கூறிய விவசாயிகள் அவற்றை
தூக்கி எறிவதை நான் கண்டேன். மிருகங்களுடன் கழிவைக்கொண்டே
அனேகமான திரவ உரம் தயாரிக்கப்படுகிறது. ஆகவே அது துர்நாற்றம்
வீசும். வாசனை திரவியங்களை கொண்டு உரம் தயாரிக்க இயலாது. வாசனை
திரவியம் வேண்டுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்,” என தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் வீசுவது நாட்டு மக்களின் பணம் எனவும் அவ்வாறு செய்வது
தேசிய குற்றம் எனவும் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.
Discussion about this post