விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா தொற்று மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய சமூகம் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டு ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்பவர்களின் கடனை இரத்து செய்வதற்கான நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Discussion about this post