வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய அண்ணன் இரண்டு மாத பெண் குழந்தையான தங்கையின் வாயில் நாணயத்தை செருகியதில் அது தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
அஹுகம்மன பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாத குழந்தையே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த இரண்டு பிள்ளைகளும் நேற்று முன்தினம் (02) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, மூத்த பிள்ளை தனது தங்கையின் வாயில் நாணயத்தை திணித்ததாக தொம்பே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொண்டையில் நாணயம் சிக்கியிருந்த சிசுவை தொம்பே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் சிசு இறந்துவிட்டதாக தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சிசுவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ரமேஷ் அழகியவண்ண மேற்கொண்டார்.
மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிசுவின் தாயும் மற்றைய குழந்தையும் தனது திருமணமான கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
Discussion about this post