வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 221 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரில் கைப்பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்த பகுதி ஒட்டுமொத்த உக்ரேனின் 15 சதவிகிதம் ஆகும்.
சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரேன் – ரஷ்யா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அணு ஆயுத யுத்த ஆபத்தை அபத்தமானது எனக் கூறிய அவர் தீவிர அமைதி ஒப்பந்தத்துக்கு நிபந்தனை அற்ற நிலையில் உக்ரேன் ஜனாதிபதி முன் வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post