ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சொற்ப மாதங்களில் நாட்டின் பலம்
பொருந்திய அரசியல் கட்சியாக மாற்றமடையும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன கூறியுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்குகொண்டு கருத்து
தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
இதனடிப்படையில் சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம்
உருவாக்கப்படும் என மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்
மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது இந் நிலையில் தேர்தலை ஒருபோதும்
ஒத்திவைக்க கூடாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
Discussion about this post