2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று தேவை ஏற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara) இன்று(22) நடைபெற்ற ஊடக மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.முகவர்கள் இன்றி இரண்டாவது வாக்கு எண்ணிக்கைசில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“எங்கள் கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். எனினும், வாக்கு எண்ணும் மையங்களுக்குள் எங்கள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை,” என்றார்
Discussion about this post