நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதபிதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
தேநீர் விருந்துபசாரத்துக்காக 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபா ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடி மிக்க காலப்பகுதியில் அரசாங்க செலவினங்கள் குறைந்த பட்சமாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
Discussion about this post