2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.
அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சு பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும்.
அதனை செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் விமல் கூறினார்.
Discussion about this post