விமல் வீரவன்ச தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி தமது கட்சிக்கு சவாலாக அமையாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார,
” மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் விமல் தரப்பு வெற்றி பெற்றது. முடிந்தால் தனித்து போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகளை பெற்று காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.” – எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், 2010 ஜனாதிபதி தேர்தலின்போது பொன்சேகாவுக்கும் வாக்குகள் கிடைத்தன, எனினும், புதிய கட்சி ஆரம்பித்த பின்னர் ஒரு வீத வாக்குகூட கிடைக்கப்பெறவில்லை. அவருக்கு என்ன நடந்தது? எனவே, புதிய கூட்டணி எமது கட்சிக்கு சவாலாக அமையாது.” – எனவும் அவர் கூறினார்.
Discussion about this post