தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பங்கீட்டு அட்டை ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு ஏதுவாக பிரதேச செயலகங்கள் ஊடாக எரிபொருள் விநியோக அட்டை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக அனைத்துப் பிரதேச செயலர்களுக்கும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குரிய எரிபொருள் விநியோக அட்டையை அவர்களின் குடும்ப் பதிவு அட்டையின் பிரகாரம் வதிவிடத்துக்குரிய பிரதேச செயலர் ஊடாக வழங்க வேண்டும்.
வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வகைப்படுத்தலின் அடிப்படையில் பிரதேச செயலர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தைக் குறிப்பிட்டு எரிபெருள் விநியோக அட்டையை வழங்க வேண்டும்.
பிரதேச செயலர்கள் தங்கள் பிரிவுக்குத் தேவையான எரிபொருள் விநியோக அட்டையை மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள், கார், கனரக வாகனங்கள், உழவியந்திரம், விசேட தேவைக்குரிய வாகனங்கள் என்பவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாபனக் கிளையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் அல்லது அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோக அட்டை அந்தத் திணைக்களத் தலைவரின் பரிந்துரையுடன் அந்த உத்தியோகத்தர் வசிக்கும் பிரதேச செயலர் ஊடாக வழங்கப்பட வேண்டும்.
திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக அட்டைகளை அந்தத் திணைக்களத் தலைவர்களால் மோட்டார் சைக்கிள், கார் என்ற வாகன வகைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கடிதம் மூலம் உறுதிப்படுத்தி மாவட்டச் செயலகத் தபானக்கிளையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post