விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும்.
இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் ராசிக்கேற்ற மந்திரம் மற்றும் உணவுப் பொருட்களை படைத்து வழிபடுங்கள்.
மேஷ ராசிக்காரர்கள் “ஓம் விக்னேஷ்வராய நமஹ” என்னும் விநாயகர் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
அதோடு இவர்கள் மாதுளை அல்லது பேரிச்சம் பழத்தாலான லட்டுக்களை செய்து படைத்து, சிவப்பு ரோஜாவை அர்ப்பணித்து வழிபடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் “ஓம் சிவபுத்ராய நமஹ” என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
விநாயகருக்கு பாசிப்பருப்பாலான லட்டு மற்றும் பச்சை ஏலக்காயைப் படைத்து வழிபட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் லம்போதராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
அதோடு, அரிசி புட்டு மற்றும் வெள்ளை ரோஜாவைப் படைத்து விநாயகரை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் கௌரிபுத்ராய நமஹ” என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
அதோடு, இந்த ராசிக்காரர்கள் வெள்ளை நிற பூக்களை விநாயகருக்கு படைத்து, அரிசி கொழுக்கட்டையை செய்து படைத்து வழிபடுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் “ஓம் பக்தவாசாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை விநாயகர் சதுர்த்தி நாளில் சொல்ல வேண்டும்.
மேலும், பேரிச்சம் பழம், வெல்லம் மற்றும் செவ்வரளி பூக்களைப் படைத்து வழிபடுவது நல்லது.
கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் லம்போதராய நமஹ” என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
அதோடு பாசிப்பருப்பு லட்டு மற்றும் உலர் திராட்சையை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். இதனால் விநாயகரின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் ஸ்வர்வ்கல்யாண் ஹேதவே நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
மேலும் இந்த ராசிக்காரர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வாழைப்பழம், வெள்ளை பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களைப் படைத்து வழிபட, விநாயகரின் ஆசியைப் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் “ஓம் ஏகாந்தாய நமஹ “என்ற கணேச மந்திரத்தை 108 முறை விநாயகர் சதுர்த்தி அன்று பாராயணம் செய்ய வேண்டும்.
அதோடு மாதுளை மற்றும் பேரிச்சம் பழத்தாலான லட்டுக்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜாக்களைப் படைத்து வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் உமாசுதாய நமஹ” என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும்.
மேலும் மஞ்சள் நிற இனிப்புக்கள் மற்றும் வாழைப்பழத்தை விநாயகருக்கு படைத்து வணங்க வேண்டும்.
மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் விக்னஹராய நமஹ” என்னும் கணேச மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
அதோடு விநாயகருக்கு எள்ளு லட்டுவை செய்து படைத்து வழிபட்டால், விநாயகரின் ஆசியைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் “ஓம் ஸுக்ஹர்தாயை நமஹ” என்ற விநாயகர் மந்திரத்தை 108 முறை கூறி, விநாயகருக்கு பால்கோவாவை படைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல்லை வழங்கி வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் “ஓம் பார்வதிபுத்ராய நமஹ “என்ற மந்திரத்தை விநாயகர் சதுர்த்தி நாளில் 108 முறை கூறி, கடலை மாவு லட்டு மற்றும் பாதாமை படைத்து வழிபட்டால், விநாயகரின் அருளைப் பெறலாம்.
Discussion about this post